மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார்.ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்த பிரதமருக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மாலை அணிவித்தார். மேலும் பிதமர் மோடிக்கு மஞ்சள் கிழங்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அவருக்கு நீலகிரி கைத்தறி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாதாரண பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
