பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.
8ஆம் தேதி செகந்திராபாத் திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கிவைக்கிறார். பின்னர் ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை அவர் தொடங்கிவைக்கிறார். பின்னர் சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை தொடங்கிவைக்கிறார். சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். 9ஆம் தேதி பிரதமர் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் செல்கிறார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார். மதுரை நகரில் மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைப்பார். தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும்.