2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.
அதன்படி 2006ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 411 புலிகள் இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 226ஆக அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.
ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்தது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 941 ஆகவும், 2018 முதல் 2022 வரையிலான 4 ஆண்டுகளில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.