உலகளவில் முன்பொரு காலத்தில் பரவலாக காணப்படும் தீர்க்கப்படாத கொடிய நோய்களில் புற்றுநோய் பிரதானமாக இருந்தது. புற்றுநோய் ஏற்பட்டு இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்தியாவிலும் புற்றுநோயால் இறப்போரின் விகிதம் அதிகமென ஆய்வறிக்கை கூறுகிறது. புற்றுநோய் ஏற்பட்டால் நிச்சயம் இறந்துவிடுவார்கள் என்ற காலம்போய் இப்போது புற்றுநோய்களுக்கு மருந்தும், தடுப்பூசிகளும் மருத்துவ உலகில் அறிமுகமாகியுள்ளன.
புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டால் நிச்சயம் குணப்படுத்த முடியும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது. மருத்துவத் துறை மிகவும் முன்னேறி இப்போது அனைத்து வகை புற்றுநோய்களுக்கும் மருந்துகள் உள்ளன.
பெண்களுக்கு அதிகம் ஏற்படும் கர்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கும் மாற்றுவழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோவேக்சின் தயாரித்த சீரம் நிறுவனம் இந்த புற்றுநோய்களுக்கான தடுப்பூசியை தயாரிக்கவுள்ளது. இதனால் இந்தியா உள்நாட்டிலேயே புற்றுநோய் தடுப்பூசிகளை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி 200-400 ரூபாய்க்கு விற்கப்படும். இதன்மூலம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு எளிதாக உண்டாகும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய்க்கு இம்மருந்து பெரிதும் உதவும்.
இந்தியாவில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை மிகவும் பிரபலமானது. இங்கே அனைத்து வகை புற்றுநோய்களுக்கும் உலகத்தர மருத்துவம் வழங்கப்படுகிறது. அடையார் புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வும், நோய்க்கான சிகிச்சையும் குறைந்த மருத்துவ செலவில் வழங்கி வருகிறது.