நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், ‘விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் கொரோனா பரிசோதனை இனிமேல் தேவையில்லை. இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. விமான பயணிகளில் அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வெப்பமானி மூலம் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.