ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், இதனால் தற்காலிகமாக அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரியவரான பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஸ்யா கடுமயான தாக்குதல்களை நடத்தி வரும் இந்த நேரத்தில் புதினின் தோற்ற ஒப்பீடுகளுடன் பல செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளது. 69 வயதான புதின் வயிற்றுப் புற்றுநோயாலும் பார்கின்சன் வியாதியாலும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் வருவதாவது: புற்றுநோயால் அவதிப்படும் புதினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை கட்டாயம் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இடைப்பட்ட நேரத்தில், தற்காலிகமாக தனது அதிகாரத்தை, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளார். நீண்ட காலத்துக்கு தனது அதிகாரத்தை ஒப்படைக்க அவர் விரும்பவில்லை. நாட்டின் அதிகாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் பத்ருஷேவின் கைகளில் இருந்தால் அதன் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கதான் செய்யும்.” என அந்த செய்தி தெரிவிக்கிறது.
இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.