கத்தார் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா – அசத்திய தமிழர்கள்

கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ் சங்கங்கள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம்

கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இக்கலாசார நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை ஆகியவை கத்தர் வாழ் தமிழ் கலைஞர்களால் வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திறமைகளை வெளிகாட்டிய அனைத்து கலைஞர்களுக்கும் ஆசான்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் கத்தர் தமிழர் சங்கத்தினால் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் கத்தர் தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.