மலைகளின் ராணி நீலகிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இயற்கையின் ஆகச் சிறந்த கொடைகள் இந்த உலகிற்கு. மலைகளுக்கு எல்லாம் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரியில் தான் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிறப்பிடம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹராஷ்ட்ரா, கோவா, குஜராத் என இந்த மாநிலத்தில் 16,000கி.மீ அகண்டு விரிந்து காணப்படுவது இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள்.
இந்த மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி தான் கர்நாடக, தமிழ்நாடு டெல்டா பகுதிகளை செல்வ செழிப்பாக்குகிறாள். தென்மேற்குப் பருவமழைக்கு காரணமே இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான். இவ்வாறு தமிழகத்தில் குற்றால அருவி, கேரளத்தில் அதிரம்பள்ளி அருவி, கர்நாடகத்தில் ஜோக் அருவி, மஹராஷ்ட்ராவில் தூத்சாகர் அருவியென மேற்குத் தொடர்ச்சியின் மலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அடர்ந்த வனங்களை கொண்ட இந்த மலைகளே நீர்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பெய்ய ஆதாரமாக விளங்குகிறது.
நீலகிரி மலைப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் இணைக்கும் புல்லியாக இருக்கிறது. நீலகிரி மலை உச்சிகள் பெரும்பாலும் 6000 அடிகளை கொண்ட உயர்ந்த மலைகளாகவே இருக்கும். நீலகிரி பகுதியில் இருக்கும் தொட்டபெட்டா மலை உச்சி 8,652அடி கொண்ட மிக உயரமான மலை உச்சியாகும். இந்த மலைப்பகுதியில் தான் முதுமலை வனப்பகுதியும், பந்திப்பூர் வனப்பகுதியும் இருக்கிறது. இவ்விரண்டுமே அடர்ந்த மரங்களும், எண்ணற்ற விலங்குகளின் சரணாலயமாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ பிரிவு இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. கிருஷ்னா, தாமிரபரணி, துங்கபத்ரா போன்ற நதிகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கீழ்நோக்கி பாய்ந்து கடலில் கலக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் புவியியல் ரீதியாக இந்த நிலப்பரப்பிற்கு பெறும் அரணாக விளங்குகிறது.