மூத்தோருக்கான சலுகை துண்டிப்பு – இரயில்வே 1500கோடி வருமானம்

இந்தியா

இரயில்வேயில் தற்போது நான்கு விதமான மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது.

மூத்தோருக்கான சலுகை பற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: மார்ச் 2020 முதல் மார்ச் 31, 2022 வரை ரயில்களில் பயணித்த 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே அளிக்கவில்லை. இதில் 4.46 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 2.84 கோடி பேர் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 8,310 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ததால், கூடுதல் வருவாய் ரூ.1,500 கோடி உட்பட மொத்தம் ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பாலின அடிப்படையில், ஆண் பயணிகள் மூலம் ரூ.2,082 கோடி ரூபாயும், பெண் பயணிகள் மூலம் ரூ.1,381 கோடியும், ரூ.45.58 லட்சம் மூன்றாம் பாலினத்தவர் மூலமும் ரயில்வேக்கு வருவாயாக கிடைத்துள்ளது. அனைத்து வகுப்புகளிலும் மூத்த பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 40 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் 53 பிரிவினருக்கு அளிக்கும் பல்வேறு கட்டண சலுகையால் ரூ.2,000 கோடி வருவாய் இழப்பை ரயில்வே சந்தித்து வருகிறது” என் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக முதியோருக்கும் 80 சதவிகிதம் வரை கழிவு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.