இலங்கை கடும் நிதிப்பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலைவாசி ஏற்றத்தால் தவித்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளிக் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நெருக்குதல் காரணமாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சற்று முன் தகவல் வெளியான நிலையில் அங்கு கடும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இலங்கையின் குருனகாலாவில் உள்ள பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரரகள் அடித்து நொறுக்கியதோடு தீ வைத்தும் கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.