நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு அளித்து வருகிறது.
தமிழக அரசும் இலங்கைக்கு உதவ மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தது. மத்திய அரசு அதற்கு வெள்ளைக்கொடி காட்டியிருந்த பட்சத்தில் இலங்கைக்கு உதவ நிதி திரட்டுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். திமுக கட்சியின் சார்பாக நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு உதவும் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு தாங்கள் பெரிதும் கடன் பட்டிருப்பதாகவும் நன்றி உரைப்பதாகவும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.