ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு துறை இருமடங்கு லாபத்தை அடைந்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் 30 சதவீத உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் பங்களிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைப்பு காரணமாக எண்ணெய் ரசாயன வணிகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இதற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவு ஜியோவின் செயல்பாட்டு லாபம், ஆண்டுக்கு 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 5ஜி சேவையும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆண்டுதோறும் தொழில்துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸின் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.