அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். நிக்கி ஹேலி எனும் பெண் நிர்வாகி அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது சிறப்பு. அமெரிக்கா அதிபரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகள் மட்டுமே. கடந்த 2020ல் அதிபர் தேர்தலில் ஜோபைடன் அதிபராகவும், கமலா ஹாரீஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்று கொண்டனர். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
குடியரசு கட்சி சார்பில் பல நிர்வாகிகள் போட்டியிட விரும்பலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதே கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவது தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் இதுதொடர்பான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு போட்டியாக அந்த கட்சியின் நிக்கி ஹேலி முதல் ஆளாக இணைந்துள்ளார். இவர் அமெரிக்காவின் தென் கரோலினாவின் ஆளுநராகவும், ஐநா சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றினார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.