சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் நடு ரோட்டிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. வாகனங்கள் இரண்டும் தாம்பரம் சானடோரியம் அருகே வந்த போது, ஒரு வாகனத்தில் மட்டும் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பழுது ஏற்பட்ட வாகனத்தோடு சேர்த்து மற்றொரு வாகனத்தையும் நிறுத்திய போலீசார். அவற்றை சானிடோரியம் சித்த மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகனத்திணை பழுது பார்க்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர். இருப்பினும் இரு வாகனங்களிலும் சுமார் ஆயிரம் கோடி பணம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும், அவை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைக்காக எடுத்து செல்லும்போது கண்டெய்னர் பழுதுபழுதடைந்து பாதியிலிலேயே நின்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்பொழுது கண்டெய்னர் லாரியின் பழுதை சரிசெய்யமுடியதால், இழுவை வாகனம் மூலம் திரும்ப ரிசர்வ் வங்கிக்கே கொண்டு செல்ல முடிவு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.