இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 88% ரிசர்வ வங்கிக்கு வந்துவிட்டாத அறிவித்துள்ளது; 42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளது

அரசியல் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது.மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கபட்டது.இதனையடுத்து, வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் அதற்கு எந்தவொரு ஆவணமும் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.இதனை அடுத்து தற்பொழுது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 88% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.