ராஜமெளலி இயக்கி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் திரைக்கு வந்த படம் தான் ‛ஆர்ஆர்ஆர்’. உலககெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. மூன்று நாட்களில் 500 கோடி வசூல் குவித்து உலக அளவில் சாதனை படைத்தது. இப்போது அடுத்த சாதனையாக ரூ.1000 கோடியை எட்டி உள்ளது. இதை படக்குழுவினர் மும்பையில் விழா எடுத்து கொண்டாடினர். இதில் ராஜமெளலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டாவது முறையாக ராஜமவுலியின் படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பாகுபலி 2 படம் 1800 ரூபாய்கள் கோடி வசூலித்து சக்கை போடு போட்டது. பாகுபலி 2 வசூலை ‛ஆர்ஆர்ஆர்’ படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.