காலங்கள் பல மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல மாற்றம் அடைந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழி நம் அனைவருக்கும் தாய் மொழி!
எம்மொழிக்கும் மூத்தாள் நம் தமிழ்த்தாய்! அவளை நாம் இப்படித்தான் அழைக்க வேண்டும்,இப்படித் தான் பேச வேண்டும் என எக்கட்டுப்பாடும் இட்டதில்லை.அத்தனை சுதந்திரம் நமக்குண்டு. என் ஊரில் பேசப்படும் ஓர் சொல் வேறு ஊரில் வேறாக புழக்கத்தில் உள்ளது, அர்த்தம் என்னவோ ஒன்றுதான்! அது தான் தமிழுக்கு அழகு!
அந்த அழகுத் தமிழ், பிப்ரவரி 25 ஆம் தேதி சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் நடந்த ‘உலக தாய்மொழி தினத்தை’ ஒட்டி கலந்துரையாடப்பட்டது வட்டார மொழியாக!
இந்நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. தலைவர் அசோக் ஆண்டப்பன் வரவேற்ப்புரை வழங்கியபின் ஷீலா ரமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
யுவராஜ் முனியன் தொழில்நுட்ப உதவி புரிந்தார்.
சாதாரணமாய் பேசிப் பழகிய நண்பர்கள் தான்,ஆனால் அன்று விதவிதமாய் பேசி எங்களை வியப்பில் ஆற்றி அசத்திவிட்டார்கள்-தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து அவர்களின் வட்டார வழக்கு மொழியில்!
பங்குகொண்டோர்:
கன்னியாகுமரி- அனிதா, ஜெரீனா
சென்னை- வெங்கடேஷ் கண்டியர், ஸ்ரீனி செல்வா,
காஞ்சிபுரம்- பூர்ணிமா
கோயம்புத்தூர்- கார்த்திகேயன், வி பி நாதன், அருண் மணி
நாமக்கல்-ஈரோடு- சங்கீதா, மதுமிதா, மகேஷ்
மதுரை- பாண்டியன், கலைச்செல்வி
இலங்கை- சிந்துஜா
பலவகை சுவை கூட்டும் பண்டங்கள் நிறைந்த உணவகத்தில் எதை உண்பது,எதனை ரசிப்பது என்பது போன்ற உணர்வு தான் அனைவருக்கும் அன்று! அனைவரின் பங்களிப்பாலும், சிறப்பு பேச்சாளர் முனைவர் திரு.ஸ்ரீனிவாசன் கண்ணப்பன் அவர்களின் ஆழ்ந்த ஆய்வுமிக்க பேச்சாலும் மிகச் சிறந்த நிகழ்வாக அமைந்தது இந்த கலந்துரையாடல்!
அதன் காணொளி இங்கே உள்ளது, கண்டு கேட்டு மகிழுங்கள்!
https://youtube.com/live/FYltfssf9Gk?feature=share
-ஷீலா ரமணன்