SAT எனப்படும் ‘ஸ்காலஸ்டிக் மதிப்பீட்டு தேர்வுகள்’ அமெரிக்க கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பரவலாக நடத்தப்படும் தேர்வாகும். சர்வதேச மாணவர்களின் சிரமங்களைக் களையும் பொருட்டு இவ்வருடம் முதல் புதிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட SAT-ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.
SAT தேர்வுகள் இதுவரை மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தைத் தூண்டும் சடங்காகவே இருந்து வந்துள்ளது. முன்பு மூன்று மணி நேரம் நடந்து வந்த இத்தேர்வு இனி இரண்டு மணி நேரங்களே நடக்கும்.
மேலும் கேள்விகள் குறுகிய வாசிப்புப் பத்திகளைக் கொண்டிருக்கும் என்றும் அமெரிக்க கல்லூரி வாரியம் செவ்வாயன்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்வெழுதுபவர்கள் தேர்வுக்கான கணிதப் பகுதிகளில் நேர மேலாண்மைக்காக கால்குலேட்டரையும் பயன்படுத்தலாம்.
தேர்வை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின் போது காகிதமின்றி இணைய வழி தேர்வுகள் தொடங்கப்படும்.
பல தசாப்தங்களாக, கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்ற தேர்வர்களுடன் சேர்ந்து இணைய வழி மானிட்டருடன் அறைகளில் அமர்ந்து, தங்கள் பதில்களுக்குத் தொடர்புடைய காகிதத்தில் குமிழிகளை நிரப்ப பென்சிலைப் பயன்படுத்துவார்கள். இனி அந்த கவலையும் இருக்க போவதில்லை.
இத்தேர்வு 1,600 மதிப்பெண்களுக்கான கணிதம் மற்றும் வாசிப்பு மற்றும் எழுதும் பிரிவுகளைக் கொண்டது.