ஆகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை – செரீனா வில்லியம்ஸ் ஓய்வு

உலகம் வட அமெரிக்கா விளையாட்டு

உலகில் மிக மிகப் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்று டென்னிஸ். இது மேற்கத்திய விளையாட்டு என ஓர் சொல்லாடலும் உண்டு. தெற்காசியா, ஆஸ்திரேலிய நாடுகளில் எப்படி கிரிக்கெட் பிரபலமோ அதேபோல் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் டென்னிஸ் மிக பிரபலம். அமெரிக்க ஓபன் டென்னிஸ், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ், பிரன்ச் ஓபன் டென்னிஸ் பட்டங்கள் டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் தங்களின் கவுரவமாக கருதுகின்றனர்.
பல வீரர்கள், வீராங்கனைகள் உலகளவில் சிறந்த ஆட்டக்காரர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் வில்லியம்ஸ் சகோதிரிகள் முதன்மையானவர்கள். வீனஸ் வில்லயம்ஸ், செரீனா வில்லியம்ஸ் இவர்கள் டென்னிஸ் களத்தில் இறங்கினால் போதும், புதிதாக களம்காணும் இளம்வீரர்கள் இவர்களது வீச்சைக் கண்டே மிரண்டுபோவார்கள்.
செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கினார். இதில் அனைத்து ஓபன் பட்டங்களும் அடக்கம். இவரும் இவரது சகோதிரி வீனஸ் வில்லியம்ஸும் சேர்ந்து 23 இரட்டையர் பட்டங்களை வென்று குவித்துள்ளனர். செரீனா மட்டுமே 73 ஒற்றையர் பட்டங்கள் வென்று சாதித்துள்ளார்.
இவர் இதுவரை 5 ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 319 வாரங்கள் முதல் இடத்தில் இருந்துள்ளார். இது இதுவரை யாரம் செய்திடாதச் சாதனையாக கருதப்படுகிறது. இவ்வாறு டென்னிஸ் உலகில் கோலோச்சிய செரீனா தனது 40வயதில் கனடாவில் ஆடிய டென்னிஸ் ஆட்டமே கடைசியென தனது ஓய்வை அறிவித்தார். இது டென்னிஸ் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்தப் போவதால் இந்த ஓய்வை அறிவித்ததாக செரீனா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.