பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார்.அதன்படி, அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை, இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
முதல் கட்டமாக, 45 கோடி ரூபாய் மதிப்பிலான, 90 லட்சம் கிலோ அரிசி, 2 லட்சம் கிலோ ஆவின் பால் பவுடர், 24 ஆயிரம் கிலோ மருந்து பொருட்கள், சரக்கு கப்பலில் அனுப்பப்பட்டுள்ளன.”அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, இலங்கைக்கான துணை துாதர் வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.