வாரணாசி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு

ஆன்மீகம்

வாரணாசியில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்னும் அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படிருந்தது. அந்த மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்திருந்தது. அறிக்கையை, மே 17ம் தேதிகுள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையுல், மசூதியில் ஆய்வு பணி நேற்று முன்தினம் துவங்கியது. வீடியோ பதிவுடன் கள ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட கலெக்டருக்கு வாரணாசி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை(மே 17) விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *