அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரின் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக முதல் கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.
முதலில் அந்த வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், தாக்குதலை நடத்தியவர் ” தனியாகச் செயல்பட்டதாகவும்” என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு போலீசார் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்க முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.