அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், இதற்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.
பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று அந்த அமைப்பு வலியுறுத்தியது. காவல்துறை கண்டு கொள்ளாததால் அந்த அமைப்பினர் ஆயுதங்களுடன் போராட்டத்தை தொடங்கினர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அந்நபரை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டது. பின்னர் காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியது. இதனால், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டன், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ என போராட்டத்தை நடத்த தொடங்கினர். ஆயுதங்களுடன் போராட்டம் தூதரகத்திற்கு உள்ளே சென்று பொருட்களை சேதப்படுத்தினர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் இன்று பேரணியை நடத்தியுள்ளனர். பேரணிக்கு அப்பகுதி மக்கள் அதிக அளவில் ஆதரவளித்துள்ளனர்.