மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, கடுமையான கழுத்து வலி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இன்று காலை மற்றும் மதிய உணவு உட்கொள்ள அவர் அறையை விட்டு வெளியே வராத நிலையில் அவரை உடன் தங்கியிருந்தோர் சென்ற சோதித்தபோது மயங்கிய நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திர இசைப் பாடல்களையும் பாடியுள்ளார். சமீபத்தில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மியூசிக் அகாடமியால் சங்கீதா கலாநிதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.