உலகில் வறுமையின் விழும்பில், ஏழைமை நிலையில் வாழும் மக்களைக் காக்க பலர் அவதிரிப்பார்கள். அவ்வாறு அவதரித்த தேவதை அன்னை தெரேசா அவர்கள். கிருத்துவ ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்த அன்னை தெரேசா தன் வாழ்நாளை மக்களின் சேவைக்கு அற்பணித்தார். கிருத்துவ துறவியாக மாறிய அன்னை தெரிசா தான் மறையும் வரை பொதுமக்கள் சேவைக்காகவே வாழ்ந்தார்.
அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரேசா தனது 18வது வயதில் துறவியாக மாறி முதலில் அயர்லாந்து நாட்டில் குடியேறினார். பின்னர் இந்தியா வந்த அன்னை தெரேசா கொல்கத்தா நகரில் குடியேறினார். கொல்கத்தா நகரில் உள்ள ஏழ்மையான மக்களின் வாழ்வை பார்த்த அன்னை தெரேசா அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவெடுத்தார்.
கொல்கத்தா நகரில் பெண் துறவிகளை கொண்டு “மிரிஷனரிஸ் ஆப் சேரிட்டி” என்ற பொதுநல அமைப்பைத் தொடங்கிய அன்னை தெரேசா பெண்கள், குழந்தைகள் என இவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டார். 1950ல் இந்தியா வந்த அன்னை தெரேசா இந்தியப் பிரஜையாகவே வாழ்ந்தார். அன்னை தெரேசாவின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்காக இலவச சேவை என்பதே.
அன்னை தெரேசாவின் அலப்பறிய பொதுசேவைக்கு பல நாடுகள் பல விருதுகளை அளித்து அவரை பெருமைப்படுத்தியது. 1979ல் உலக அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றார். 1980ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 1996ம் ஆண்டு கவுரவ அமெரிக்க குடியுரிமை வழங்கி இவரைப் பெருமைப்படுதியது அமெரிக்கா.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1910ல் பிறந்த அன்னை தெரேசா 1997ம் ஆண்டு தனது 87ஆம் வயதில் வயது மூப்பு காரணமாக மறைந்தார். மறைந்தப் பின் அற்புதங்கள் நிகழ்த்திய அன்னை தெரேசாவிற்கு 2016ம் ஆண்டு வாட்டிகன் நகரத்தில் “புனிதர் பட்டம்” வழங்கி கவுரவித்தது.
,