சூரியனில் சக்தி வாய்ந்த வெடிப்பு – செயற்கைகோள்களுக்கு பாதிப்பு

உலகம்

சூரியனின் மேற்பரப்பில் நிகழ்ந்து வரும் இரசாயன மாற்ற நிகழ்வுகளால் அவ்வப்போது தீக்கதிர் வெடிப்புகள் நிகழ்வது வாடிக்கை. சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் போது, காந்த விசையின் ஈர்ப்பால் ஏற்படும் இந்த வெடிப்புகள், சில நிமிடங்கள் தொடங்க சில மணி நேரம் வரை தொடரும். இந்த வெடிப்பின் போது ஏற்படும் கதிர்வீச்சினால் செயற்கை கோள் முதலான தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார விநியோக நிலையங்கள், விண்கலங்கள் ஆகியவைகள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்திய விண்வெளி அறிவியல் சிறப்பு மையத்தின் இணை பேராசிரியர் திப்யேந்து நந்தி கூறியதாவது: சூரியனின் காந்தப் புலத்தால், சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது, நுாறு மடங்கு சக்தி வாய்ந்த வெடிப்பாகும். இதனால், மின்னனு மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆசிய – பசிபிக் பிராந்தியங்களில், இதன் பாதிப்பு இருக்கும். இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து, இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.