திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் ஆண்டவர் அரசாங்கம் செய்யும் திருச்செந்தூரில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோயில்களில் தங்கி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் இன்று மாலை நடைபெற்றது. சூரசம்ஹார விழாவில் ஜெயந்திநாதர் அவதாரம் எடுக்கும் முருகர், தனது தாயார் பார்வதி வழங்கிய வெற்றி வேலால் சூரனை வதம் செய்தார். அப்போது, முருகனின் வேல் வீச்சில் கூரனின் முகம் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.
இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
