ஆடி மாதச் சிறப்புகளும், கோயில் பண்டிகைகளும்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் தமிழ்நாடு

தமிழ்நாடு ஆன்மீகத்திற்கும், தலைச் சிறந்த கோவில்களுக்கும் மிகவும் பெயர்பெற்றது. பல்வேறு சிறப்புக் கொண்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. அத்திருகோயில்களிள் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புக் கொண்டவை. அனைத்து தமிழ் மாதங்களிலும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அவ்வாறு தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதம் ஆன்மீக பக்தர்களுக்கு மிகவும் சிறப்பான மாதம். அனைத்து கோவில்களிலும் சிறப்பான பூஜைகள் முதற்கொண்டு பண்டிகைகள், திருவிழாக்கள் என தமிழ்நாடு முழுவதும் கலைகட்டும். ஆடி மாதம் முதல் தேதியே ஆடி 1 என்று கோயிலில் காப்புக் கட்டி விழா தொடங்கி விடும். ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடிப் பூரம் என அனைத்தும் கலைகட்டும்.
ஆடி மாதம் என்றால் பிராண வாயு அதிகம் கிடைக்கும் மாதமாக கருதப்படுகிறது.
ஜீவ ஆதார சக்தி கொண்ட மாதம் இந்த ஆடி மாதம். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் அழைப்படுகிறது. ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் விழாக்கள் எடுப்பது வழக்கம். அஷ்டலக்ஷ்மிகளுக்கு உகந்த மாதம் இந்த ஆடி மாதம். ஆடி மாதத்தில் விவசாயம் ஆரம்பித்தால் செழிப்பாக இருக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனால் தான் ஆடி மாதத்தை “ஆடி பட்டம் தேடி விதை” என்று கூறுவார். குறிப்பாக ஆடி மாதத்தில் காற்றின் அளவு மிகுதியாக காணப்படும். இதனால் எளிதில் ஜீரணிக்கக் கூடிய கூழ் போன்ற உணவுகள் அருந்துவது சிறப்பு. இதனால் தான் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் எடுக்கும் திருவிழாக்களில் கூழ் வழங்கப்படும். மற்ற மாதத்தில் கோயில் திருவிழாக்களில் பிற பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும், ஆடி மாதத்தில் கூழ் பிரதானமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
ஆடிப் பெருக்கு என்பது மிகவும் பிரசித்திப் பெற்ற நிகழ்வு இந்த ஆடி மாதத்தில். நதிக்கரையோரம் பெண்கள் பூஜையிட்டு வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இவ்வாறு ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published.