கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என கேள்வி
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 13 ஆம் தேதி இரவு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒக்கியார் குப்பம் பகுதியில் விற்ற விஷச் சாராயத்தை குடித்த 80-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.