இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே 6-ம் தேதி முதல் நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்தார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் பிரதமர் பதவி விலகி புதிய பிரதமர் பதவியேற்றார்.
இந்நிலையில் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கையின் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டில் சட்டம் – ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் பதவியேற்றிருந்த போதும், கோத்தபய குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து முழுவதுமாக விலக வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.