கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகினார்; ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்வது சந்தேகம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

கே.எல்.ராகுல் விலகினால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் கே. எல் ராகுல் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுல் ரசிகர்களிடம் கடுமையான விமர்சங்களை பெற்று இருந்தார். மேலும், அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.