இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியுடன் விடை பெற்றார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா போபண்ணா ஜோடி பிரேசில் ஜோடிக்கு எதிராக மோதினார்கள். இந்த போட்டியில் நேர் செட்களில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் கண்ணீருடன் விடைபெற்றார்.
கடந்த 2005ல் 18 வயதில் இதே மெல்போர்ன் மைதானத்தில் தான் தனது முதல் போட்டியை செரினா வில்லியம்ஸ்க்கு எதிராக விளையாடினார், இப்போது அதே மைதானத்தில் கடைசி போட்டியையும் முடித்துக் கொண்டு விடை பெற்றார்.
மேலும் அவர் தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையைப் பற்றி கண்ணீருடன் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் நான் எனது கடைசி போட்டியில் என் மகன் பார்வையாளராக இருந்தது மகிழ்ச்சி எனவும் கூறினார்.
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த நிலையில் சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
