ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாடுகள் ) நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ” அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 34-ஆவதாக ‘‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’’ இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசுகள் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அதற்கேற்ப, இணைய வழியில் கிடைக்கும் சூதாட்டங்களுக்கும் பல்வேறு மாநில அரசுகள் சட்டமியற்றி தடை விதித்துள்ளன” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.