இன்றையக் காலகட்டத்தில் தொலைகாட்சியில் வரும் விளம்பரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அழகு சாதனங்கள் மற்றும் இதர அழகைக் கூட்டும், பொழிவு தரும் சாதனங்களே ஆகும். சோப்பு, முகம் பொழிவாக்கும் வாஷ், பாடிவாஷ் அழகு க்ரீம்கள் என அனைத்தும் தொலைகாட்சிகளை ஆக்கிரமிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரே வாரத்தில் முகப்பொழிவு கிடைக்கும், மேணி பொழிவாக அழகுடன் காணப்படும் என்ற வாக்குறுதிகள்.
மேற்கத்திய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உலகின் பிரபல அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்களும் இந்தியாவில் மிக எளிதாக, எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்திய மாடல்கள் உலகளவில் பிரபலமாக்கும் பொருட்டு உலக அழகி, பிரபஞ்ச அழகி என்று அனைத்துப் பட்டங்களிலும் இந்திய அழகிகளை முன்னிருத்தி அவர்களை விளம்பர மாடல்களாக்கி இந்தியச் சந்தைகளில் அதனை விற்பதே அவர்களின் நோக்கம். குறிப்பாக பாரிஸ் நகரில் இயங்கும் நிறுவனங்கள் இந்திய அளவில் பெரிய சந்தையை தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மக்கள் தொகை மற்றும் இந்திய மக்களின் தோள் நிறம் இவற்றை மூலதனமாக வைத்து ஆறே நாட்களில், ஒரே வாரத்தில் அழகாகிவிடுவீர்கள் என்ற ஆசை வார்த்தைகளை காட்டி அழகுசாதனப் பொருட்களை வாங்கும்படி செய்கின்றனர். உபயோகித்தப் பின் நல்ல முடிவுகள் பெரும்பாலும் வருவதில்லை என்றாலும் இந்திய மக்கள் அவற்றைகளை வாங்குவதை நிறுத்துவதில்லை.