உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சேர்ந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாது – மத்திய அரசு விளக்கம்

இந்தியா செய்திகள் மருத்துவம்

இந்தியாவில் இருந்து வெளிநாடுளுக்குச் சென்று பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொறியியல், எம்பிஏ போன்ற படிப்புகளுக்கே அதிகம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை மாறிப்போய் இப்போது மருத்துவம் படிக்கவும் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துக் காணப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளில் இந்தியவிலிருந்து போய் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஏராளம்.
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் மிகவும் குறைவு மற்றும் மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் இதுபோன்ற காரணங்களால் மிக மிக குறைந்த வித்தியாசத்தில் மருத்துவப் படிப்பை தவறவிடும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து இந்தியா திரும்பியப் பின் முறையான மருத்துவ சேவைத் தொடர தேர்வு எழுதி அங்கிகாரம் பெறுகிறார்கள்.
2021ம் ஆண்டு வரை இந்த மாதிரியான நடைமுறைகள், வெளிநாட்டு பல்கலைகழங்களில் சேர்க்கை எல்லாம் முறையாக நடந்துக் கொண்டிருந்தன. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தவுடன் உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி, இந்திய அரசாங்கம் அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வந்தது. ஊக்ரைனில் இருந்து இந்தியா வந்த மாணவர்கள் இன்னும் இங்கேயே உள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் ஓர் முடிவை எட்டாத நிலையில் மாணவர்களின் மீதமுள்ள படிப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்திய மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு இங்கேயுள்ள கல்லூரிகளில் அனுமதியளிக்க வாய்ப்பில்லை என்ற பதிலை தாக்கல் செய்துள்ளது. இதனால் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் கவலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.