சுபகிருது வருடம் தொடக்கம் – மக்கள் கோலாகல கொண்டாட்டம்

NRI தமிழ் டிவி கலை / கலாச்சாரம் தமிழ் சங்கங்கள் தமிழ்நாடு

நிகழ்ந்து வந்திருந்த பிலவ வருடம் முடிந்து சுபகிருது வருடம் பிறந்ததை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இராசிகளில் முதல் இராசியான மேஷ இராசிக்கு பிரவேசிப்பதைக் காரணியாக கொண்டு தமிழ் வருடத்தின் துவக்கம் குறிக்கப்படுகிறது. அவ்வகையில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாசமே மேஷ இராசிக்கு பிரவேசிப்பதால் சித்திரை 1ஐ தமிழ்ப்புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா நெருக்கடிகள் தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்புத்தாண்டான இன்று அனைத்து கோவில்களும் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்பட்டது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு தீபாராதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் பல சுற்றுலா தளங்களிளும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துக் காணப்பட்டது. கொரோனாவுக்குப் பின்னான இந்தப் பண்டிகை கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சகல செளபாக்கியங்களும் கிடைக்கப்பெற NRI தமிழ் சார்பாக வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *