பெண்கள் படித்தால் அது சமூகத்திற்கே நன்மை அளிக்கும் என அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஜோஹோ நிறுவனத்தை இன்று உயர்த்தியுள்ள ராதா வேம்பு ஓர் மிகச் சிறந்த உதாரணம். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் சென்னை ஐஐடி நிறுவனத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.
ஜோஹோவில் ராதா வேம்பு மெயில் தயாரிப்பு மேலாளராக (Zoho Mail’s Product Manager) பணியாற்றி வருகிறார். இவருக்கு கீழ் 250 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டினில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஜோஹோவின் சென்னை அலுவலகத்தில்தான் ராதா வேம்பு பணியாற்றி வருகிறார். 6 கோடிக்கும் மேற்பட்டோர் ஜோஹோவின் மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருள் இங்கு டிசைன் செய்யப்படுகிறது. ராதா வேம்பு இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற பெருமைக்குறியவர். இவரது சொத்து மதிப்பு ரூ 21 ஆயிரம் கோடியாகும் (2.6 கோடி டாலர்). ராதா வேம்பு வேளாண்மை தன்னார்வல அமைப்பான ஜானகி ஹைடெக் ஆக்ரோ பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும், ஹைலேண்ட் வேலி கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் உலகின் பணக்காரர்களில் 1176 ஆவது இடத்தில் உள்ளார்.