சூடான் உள்நாட்டு போர் பதற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்ற முயற்சி, இந்திய விமானங்கள் தயார் நிலையில்

அரசியல் ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்தனர். போரின் ஒரு பகுதியாக சூடான் தலைநகர் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை துணை ராணுவம் கைப்பற்றியது. இதனால், விமானப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியர்கர்களை மீட்டு வருவதற்காக இரு சி-130ஜே வகை விமானங்கள் தயாராக உள்ளன என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூடான் வான் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்பதற்கான இரு விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் தயாராக உள்ளதாகவும் இந்தியர்களை சூடானிலிருந்து மீட்டுவர பல தரப்பினருடனும் பேசி ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ரமலான் பண்டிகையை ஒட்டி, மனிதாபிமான அடிப்படையில், 72 மணிநேரம் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், இரு தரப்பிலும் சண்டை ஓய்வதற்கான அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில், சூடானில் உள்ள மற்ற நாட்டவர்கள் வெளியேற உதவுவதாக ராணுவம் அறிவித்தது. இதற்கு சர்வதேச விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள துணை ராணுவப் படையும் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.