துருக்கி சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம்

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் பலத்த சேதமாகின.
நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்த உலக நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12, 873 பேரும், சிரியாவில் 3,162 பேரும் உயிரிழந்துள்ளனர்.
50,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
அதில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற கைகோருங்கள் என்ற செய்தியுடன் இடிபாடுகளில் சிறுவனின் உடல் இருப்பது போல சித்தரித்துள்ளார். இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *