தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்டும் என அறிவிப்பு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.