சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் 1,800 கோடி; கடும் அதிருப்தியில் கூகுள் நிறுவன ஊழியர்கள்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையின் ஊதியம் விவரம், கூகுள் ஊழியர்கர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி, ஊழியர்களுக்கான சலுகைகள் பெருமளவு குறைக்கப்பட்டு, 12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுந்தர் பிச்சை மற்றும் மற்ற பணியாளர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் ஊழியர்களிடையே புயலை கிளப்பியுள்ளது.
சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகமாக சுந்தர் பிச்சை ஊதியம் பெற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பக்கங்களில் இது குறித்த கருத்துகளும், மீம்ஸ்களும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சேமிப்பு ஊழியர்களிடம் மட்டுமே தவிர, கடினமாக உழைக்கும் சிஇஓ மற்றும் நிறுவன துணைத் தலைவர்களுக்கு இல்லை என குமுறியுள்ளனர். ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு தனது ஊதியத்தில் 40 சதவீதத்தை குறைத்துக் கொண்டதையும் கூகுள் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை 2,200 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.