உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் தமிழ் மற்றும் பிற சில மாநில மொழிகளில் வெளியீடு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தினவிழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது.
அதில் 52 வழக்கின் தீர்ப்புகள் தமிழிலும், 29 வழக்கின் தீர்ப்புகள் மலையாளத்திலும், 28 வழக்கின் தீர்ப்புகள் தெலுங்கிலும், 21 வழக்கின் தீர்ப்புகள் ஒடியா மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.