கொல்கத்தா நகரின் அடையாளம் துர்கா பூஜை – 2022ம் ஆண்டின் தனித்துவமான பந்தல்கள்

ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் வரும் நிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் துர்கை பூஜையை முன்னிட்டு, கொல்கத்தாவில் புதுப்புது வடிவமைப்புகளுடனும், மையக்கருப்பொருள்களுடனும் பந்தல்கள் அமைக்கப்படும். மதம் முதல் வரலாறு, காலநிலை மாற்றம் என்று சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கும் விதமாகவும், வெளிக்காட்டும் விதமாகவும் பந்தல்கள் அமைக்கப்படும்.
அந்தவகையில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும், சிலிக்கானால் செய்யப்பட்ட துர்க்கை பொம்மை, கொல்கத்தா துர்க்கை பூஜை விழாவில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
வாடிகனின் புனித பீட்டர்ஸ் பேராலாயம் போல அமைத்துள்ள துர்கா பூஜை பந்தல் அனைவரின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான விழிப்புணர்வு காட்சி பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டீல்கள், கொசுவர்த்தி, பட்டாசு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் இன்றும் பறைசாற்றும் இந்த அழகிய திருவிழாவை உலகமே காணும் வகையில் மேற்கு வங்க அரசு சார்பில் 10 நாள் துர்கா பூஜை பேக்கேஜாக வழங்குகிறது. இந்த பேக்கேஜில் பயணிகள் துர்கா பூஜையின் பல்வேறு அம்சங்களை காண முடியும். கண்களுக்கு மட்டும் அல்ல ஆன்மாவுக்கும் விருந்தளிக்கும் திருவிழாவை காண ஒரு முறை கண்டிப்பாக போய்வரலாம்.

Leave a Reply

Your email address will not be published.