ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடப்பதால் அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதில் பெண்கள் கல்வி கற்க அனுமதியில்லை என்ற முக்கிய கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதற்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் ஆரம்பித்திருக்கின்றன.
ஏற்கனவே பெண்கள் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்போது பல்கலைகழகங்கள் போன்றவற்றிலும் பெண்கள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆண் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேராசிரியர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் பெண்கள் பல்கலைகழங்களில் நுழைய ஆதரவு குரல் எழுந்திருக்கிறது. இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் எழ வேண்டும் என்ற குரல்களும் வலுத்துவருகிறது.