ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அவர்கள் பிற்போக்குத்தனமான ஷரியா சட்டம் கொண்டு அந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்த படியே இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களில் பெண்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருந்த போதிலும் ஹேராட் நகரில் மட்டும் பெண்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அங்கும் தாலிபான்கள் ஒரு திடீர் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இனி பெண்களுக்கு கார்கள் மற்றும் பைக் ஓட்ட உரிமம் வழங்க கூடாது என்று நகரின் தலைமைக்கு தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் கார்களில் பயணிக்கலாமே தவிர வாகனங்களை ஓட்டக்கூடாது என தாலிபான் அரசு கூறியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.