தமிழரின் வாழ்வியல் பெருமையை எடுத்துக் கூறும் கீழடி அருங்காட்சியகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 18.43 கோடி மதிப்பிட்டில் தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் பெற்று கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக மத்திய அரசின் 3 கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 18 கோடியே 43 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கீழடி அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர்மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல்வழி வணிகம்’, ‘வாழ்வியல்’ எனும் 6 பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கீழடி அருங்காட்சியத்தில் தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி, ஒலிக்காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக் கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *