உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தினமும் 2 கால யாகபூஜை நடைபெற்றது.
6-கால யாகபூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. ஓதுவார்கள் கட்டியம், கந்தபுராணம் பாடினர்.
குடமுழுக்கு நிகழ்ச்சி நிரல்களை மலை அடிவாரத்தில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது .
கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி , திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/01/images.jpeg)