கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சுமார் 3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் நிதியுதவி அளித்துள்ளனர். காணொளி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி வழங்கினர் .ஏற்கனவே 20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.கொரோனா நிதி வழங்கிய கடல்கடந்து வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் நன்றி கூறியதோடு ,
“காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது.
தமிழ் போல் வாழ்க!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.