தமிழ் ஒளி விருது விழா

உலக பொது நிகழ்வுகள் தமிழ் நல்லாசிரியர் தமிழ்க்கல்வி

என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை வழங்கும் 2019 அரசுப் பொதுத் தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுத்த மாணவருடைய ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் விழா.

தேதி :31.01.2020, நேரம்: காலை 11 மணி
இடம் : ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் தமிழ் ஒளி விருதுவிழா ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நிகழ்ந்தது.

NRI தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை இணைந்து ,2019 -ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவருடைய ஆசியருக்கு மாவட்ட வாரியாக 34 தமிழாசிரியர்களுக்கு தமிழ் ஒளி விருது வழங்கப்பட்டது.
தமிழ் ஒளி விருதில்,விருது சான்றிதழ், ஊக்கத்தொகை, தாம்பூலம்( பழம் ,இனிப்பு, விதைப்பந்து) கொடுத்து பொன்னாடை அணிவித்து மாலையிட்டு 34 தமிழ் ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட(அரியலூர் மாவட்டம்)கல்வி அலுவலர் திரு.P. பாலசுப்பிரமணியம் அவர்கள் விழா தலைமை ஏற்று, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .க.இராஜகுமார் அவர்கள் விழா முன்னிலை உரை வழங்கி, திரு.த.இளங்கோவன் உதவி தலைமையாசிரியர் அவர்கள் வரவேற்புரையை வழங்கியும் விழா அறிமுக உரையை திரு.காஞ்சி தமிழன் NRI தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்&தயாரிப்பாளர் அவர்கள் வழங்கினார். நன்றியுரையை திரு. பாலச்சந்தர் (தலைமை படத்தொகுப்பாளர்,NRI தமிழ்) அவர்கள் வழங்கினார் .

பின் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.
இவ்விழாவில் என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளையும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நியூயார்க் தமிழ்ச் சங்கமும், பாண்டிச்சேரி மாவட்டத்திற்கு ரோட் ஐலாண்டு தமிழ்ச் சங்கமும்,நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சான் பிரான்சிஸ்கோ தமிழ் மன்றமும் , விருதுநகர் மாவட்டத்திற்கு கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கமும்,திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழ் மக்கள் மன்றமும் ,தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனக்டிக்கட் தமிழ்ச் சங்கமும், சிவகங்கை மாவட்டத்திற்கு வளர்தமிழ் இயக்கம் வட அமெரிக்காவும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு டெலவர் தமிழ்ச் சங்கமும் , கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கமும் ,புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிசோரி தமிழ்ச்சங்கமும் என அனைத்து அமெரிக்க தமிழ்ச் சங்கங்களும் எஞ்சிய பிற மாவட்டங்களான அரியலூர் மாவட்டத்திற்கு திரு.விட்ணு வே இராசா அவர்களும் ,சென்னை மாவட்டத்திற்கு திருமதி. தனலட்சுமி &வித்யா அவர்களும், கடலூர் மாவட்டத்திற்கு திரு.முத்து அவர்களும், தர்மபுரி மாவட்டத்திற்கு திரு .ஜான் ஜோசப் அவர்களும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரு.தயானந்த் குசேலன் அவர்களும் , ஈரோடு மாவட்டத்திற்கு திரு .ஸ்ரீதர் சண்முகம் அவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திரு.ஸ்ரீதர் அவர்களும்,காரைக்கால் மாவட்டத்திற்கு திரு.சிவா அவர்களும் ,கரூர் மாவட்டத்திற்கு dr.ஆறுமுகம் மற்றும் வசந்தி ஆறுமுகம் அவர்களும் , கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜான் ஜோசப் அவர்களும், மதுரை மாவட்டத்திற்கு திரு பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களும்,நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திருமதி.மீனா சிவராமகிருஷ்ணன் அவர்களும், நாமக்கல் மாவட்டத்திற்கு டாக்டர்.விஜய் பிரபாகர் அவர்களும், ஊட்டி மாவட்டத்திற்கு திருமதி. சரண்யா செல்வராஜ் அவர்களும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு திரு. பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களும் , சேலம் மாவட்டத்திற்கு திரு.டாக்டர் சரவணன் ராமலிங்கம் அவர்களும் ,தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திருமதி.காஞ்சனா பூலா அவர்களும் ,தேனி மாவட்டத்திற்கு கணேஷ் ராதாகிருஷ்ணன் அவர்களும், திருப்பூர் மாவட்டத்திற்கு பாலகங்காராம் ஜெயராம் அவர்களும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு திரு.கார்த்திக் தாமா அவர்களும், திருவாரூர் மாவட்டத்திற்கு திரு.டாக்டர். சச்சின் ஜெயின் அவர்களும், திருச்சி மாவட்டத்திற்கு திரு. திலீபன் பிரபாகரன் அவர்களும், வேலூர் மாவட்டத்திற்கு பாபு மோசஸ் அவர்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு திரு.குமரன் ரவி அவர்களும், விருதினையும் ,ஊக்கத் தொகையும் வழங்கினர்.

விருதினை இணைந்து வழங்கிய அனைத்து அமெரிக்க தமிழ்ச் சங்கங்களுக்கும் மற்றும் அமெரிக்க தமிழ் அமைப்புகளுக்கும், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும், என்.ஆர்.ஐ தமிழ் நிறுவனர் திரு.விட்ணு வே ராசா அவரின் சார்பாக என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை தமிழ் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ் ஆசிரிய பெருமக்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவ செல்வங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

இந்நிகழ்ச்சி தொடர்பான ஊடக பதிவுகள்:


நன்றி : தினகரன் நாளிதழ்