தமிழகத்தை சேர்ந்த துறவியான மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் போப்பால் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த துறவி மறைசாட்சி தேவசகாயத்தை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கி சிறப்பித்தார். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், குமரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஷப்புகள், பங்கு தந்தைகள், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.